தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்..! எத்தனை மொழிகளில் எத்தனை நாடுகளில் வெளியாகிறது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இருக்கும் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் 190 நாடுகளில், வெளியாகிறது என Y Not Studios தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜிகர்தண்டா ,பேட்ட போன்ற மாஸ் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகை தனுஷை வைத்து ‘ ஜகமே தந்திரம் ‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தனுஷ் ,ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜுன் 18) வெளியாகவுள்ள ‘ ஜகமே தந்திரம் ‘ திரைப்படம் வரும் ஜீன் 18 ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் Y Not Studios சார்பில் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
