குடும்பத்தினருடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் !
கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது .
இதே போல் கடந்தமுறை நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை செய்துகொண்டு அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார் இது அனைவரும் அறிந்த ஒன்று .
இந்நிலையில் அவர் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தபோது கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று வந்துவிட்டது . இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகமானதால் அவரால் செல்லமுடியவில்லை.
இந்நிலையில் கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது . சிறப்பு விமானத்தில் 14 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த 14 பேரில் ரஜினிகாந்த் தவிர, குடும்ப உறுப்பினர்கள் யார் யார் செல்லப்போகிறார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை.
