குற்றம்தமிழ்நாடு

பாலியல் புகாரில் கட்டப்பஞ்சாயத்து… வழக்கறிஞரை பகிரங்கமாக மிரட்டிய அரசியல் பிரமுகர்…

சென்னை, கீழ்ப்பாக்கம் புனித ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டில் பாலியல் புகாரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதான வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்ற விசிக பிரமுகர் ஒருவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பத்மாசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் மற்றும் பள்ளி நடத்தி வரும் நான் கடவுள் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பான தகவல் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எபிதாஸ் என்பவர் மாணவி ஒருவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி எழுத்துப்பூர்வ புகார் அளித்த நிலையில், அப்போதைய பள்ளி முதல்வர் பிரான்சிஸ், ஆசிரியர் எபிதாஸிடம் மன்னிப்பு கடிதம் பெற்று, அவர் மீது நடவடிக்கை எடுப்பதுபோல் 15 நாட்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்து மீண்டும் அதே பள்ளியில் பணியில் தொடர அனுமதித்தார். புகார் அளித்த மாணவி, வேறு ஒரு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர், சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் புகார் செய்தார். ஆசிரியர் எபிதாஸ் மீது போக்சே சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்றும், பாலியல் புகாரை மறைத்ததோடு தற்போது பள்ளியின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் முன்னாள் முதல்வர் பிரான்சிஸ் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புஆணையத்திற்கும் புகார் அனுப்பியிருந்தார்.

கொரோனா பேரிடர் காரணமாக பாலியல் புகாரை விசாரிக்க இயலாது என்று பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் ஸ்ரீதருக்கு, தமழ்நாடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு எதிராககுற்றச்சாட்டகளை விரைந்து விசாரிக்க நிலை ஏற்பட்டதால் தற்போது ஆசிரியர் எபிதாஸ் மீது அளித்துள்ள புகாரை மீண்டும் ஆணையம்தூசு தட்டியுள்ளது. ஆனால், காவல் துறையினர் இந்த புகாரை விசாரிக்க வேகம் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி பிரமுகர் தமிழ் கதிர் என்பவர், வழக்கறிஞர் ஸ்ரீதருக்கு போன் செய்து வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளார். டென்னிஸ் எப்படி விளையாடுவது என்று கையைப் பிடித்து சொல்லிக் கொடுக்கும்போது கை பட்டுவிட்டதாக ஆசிரியர் எபிதாஸ்-க்கு ஆதரவாக பேசி கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது வழக்கறிஞர் ஸ்ரீதரை, வி.சி.க பிரமுகர் தமிழ் ஆபாசமாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக பேசிய விசிக பிரமுகர் மிரட்டல் விடுத்தது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார்.