அரசியல்தமிழ்நாடு

அதிமுகவையும் தலைவர்களையும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது… புகழேந்தி ஆவேசம்…

அதிமுகவையும், அதிமுக தலைவர்களையும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாமகவின் குற்றச்சாட்டுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பதிலளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கூறினார். தேக்கு மரத்தில் மரங்கொத்தி பறவை கொத்திக் கொண்டே இருந்தது. அப்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. நாம கொத்துவதால் தேக்குமரம் விழுந்துடும்னு நெனச்சுது. அதுபோல அன்புமணி ராமதாசின் பேச்சு உள்ளதாக விமர்சித்தார்.

ஒரு கட்சியைப் பற்றி தவறாக பேசம்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கட்சியைப் பற்றி தவறாக பேசம்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாமகவுடன் பயணித்துதான் அதிமுக தோற்றுவிட்டது என்றால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்ற புகழேந்தி, அதிமுக இயக்க்ம மாபெரும் வெற்றிகளைத் ஈட்டித் தந்த இயக்கம். இந்த இயக்கத்துடன் ஒத்துப்போகலாமே தவிர, எங்கள் தலைவர்களை குறை சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை அன்புமணி ராமதாசுக்கு தெரிவித்துக் கொள்வதாக புகழேந்தி கூறினார்.

ஒரு கூட்டணியில் சேர்ந்துவிட்டு, எங்களால்தான் அனைத்தும் நடந்தது என்று சொல்வது பாமகவுக்கு வழக்கமாக போய்விட்டது. அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். பாஜகவுடனோ, பாமகவுடனோ பயணித்ததால்தான் தோற்றுவிட்டோம் என்று எங்கள் தலைவர்களோ, நாங்களோ அதைப்பற்றி பேசவே இல்லை. அது குறித்து அன்புமணி ராமதாஸ் ஏன் பேச வேண்டும் என்று புகழேந்தி கேள்வி எழுப்பினார்.