முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துடன் போட்டிபோடும் அமீர்கான்!
கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்தியாவின் செஸ் நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துடன் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் செஸ் விளையாடி நிதி திரட்ட உள்ளார் .

”செக் மேட் கோவிட்” என்ற பெயரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது .இந்த நிகழ்வில் செஸ் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட இந்தி நடிகர் அமீர்கான் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துடன் இவர்கள் இதற்கு முன் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் வெல்ல போகிறார்கள் என்பதை காண இருவரின் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளார்கள் .
