தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த இன்னும் 3 ஆண்டுகள் ஆகுமாம்…! அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்!
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என அதிர்ச்சி தரும் வகையில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை தமிழக மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த பெருந்தொற்றின் கோரத்தாண்டவத்தை தடுக்க மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இதே வேகத்தில் தடுப்பூசிகளை செலுத்தி வந்தால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என அதிர்ச்சி தரும் வகையில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 5 கோடிக்கும் அதிகமாக உள்ளனர் . ஆனால தற்போது 92 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
