விளையாட்டு

இந்தியா vs இலங்கை கிரிக்கெட் போட்டி ! கேப்டன் ஆகும் ஷிகர் தவான்!

இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஐ பி எல் போட்டிகளில் பல முறை கேப்டனாக இருந்துள்ளார் .

Why is Bhuvneshwar Kumar not in the reckoning for Tests anymore?

இந்நிலையில் இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் . மேலும் துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.