Covid19தமிழ்நாடு

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள்? நெஞ்சை உருக்கும் தகவல்…!

தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் இதுவரை சுமார் 1400 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து வாடி வருவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் மக்களின் சந்தோஷத்தை பறிக்க தொடங்கிய கொரோனா என்னும் பெருந்தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை சுமார் 1400 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாக மட்டவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த நெஞ்சை உருக்கும் தகவலை தெரிவித்துள்ளது.

Pleas for help in India as COVID-19 leaves children without carers | Reuters

தற்போது புதிய ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண பணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

UNICEF estimates deaths of 8.8 lakh children due to COVID-19 in South Asia;  maximum from India

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 5 வரை இந்தியாவில் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் தாய் தந்தையில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்து குழந்தைகள் வாடி வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.