1000 ஆண்டுகள் ஆகியும் அப்டியே இருக்கும் கோழி முட்டை…! இஸ்ரேல் நாட்டின் அரிய வகை கண்டுபிடிப்பு !
உலகில் தற்போது என்னனென்ன நடக்கிறது எத்தனை உயிர்கள் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பறிபோகியுள்ளது நாட்டில் இருக்கும் அனைவரும் இன்று வரை போராடியும் கொரோனவை அழைக்க முடியாமல் திணறி வரும் சூழலில் இஸ்ரேல் நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்கள் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோழி முட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 1000 ஆண்டுகள் ஆகியும் அந்த கோழி முட்டை உடையாமல் அப்டியே இருப்பது தான் .

இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து இந்த பழமைவாய்ந்த உடையாத கோழி முட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முட்டையின் சிறப்பம்சங்கள் :
- இந்த கோழி முட்டை இத்தனை ஆண்டுகள் ஆகியும் கெட்டுப்போகாமல் இருப்பது .
- 1000 ஆண்டுகள் ஆகியும் சிறு சேதம் கூட இல்லாமல் இருப்பது.
- முட்டையின் ஓட்டை வைத்து இது இத்தனை அன்டுகள் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளனர்.

யவ்னே நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து அந்த முட்டை மட்டும் இல்லாமல் மேலும் சில பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
