சிறுநீரை குடிக்க வைத்த கொடூரன்… லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் உறவில் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்…
இந்த நூற்றாண்டில் அதுவும் தற்போது இந்தியாவில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் கலாச்சாரம் மிகவும் அதிமாக உள்ளது . இந்த கலாச்சாரத்திற்கு நன்கு படித்த ஆண்கள் மற்றும் பெண்களே அதிகளவில் அடிமையா உள்ளனர் . அந்த மாரி லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்களாக விவரிக்கிறது இந்த உண்மை சம்பவ செய்தி தொகுப்பு.
கேரளாவில் இளம்பெண் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு கொடூரன் , அவரை தனது சிறுநீரை குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கும் பங்கு வர்த்தகர் மார்ட்டின் ஜோசப் (33). இவர் கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ உறவில் இருந்து வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கே சென்று விட்டார்.
அப்போது தான் அந்த பெண்ணுக்கு ஆரம்பித்தது கஷ்டகாலம் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வராவிட்டால் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் கசியவிட்டு விடுவேன் என்று மார்ட்டின் ஜோசப் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் வேற வழியில்லாமல் மீண்டும் அவரது வீட்டிற்கே வந்தார். அந்த பெண்ணை அவன் மீண்டும் அடித்து துன்புறுத்தியதுடன், தனது சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்.
இப்படி தினமும் கொடுமைகளை அனுபவித்து வந்த பெண், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி விட்டார். நேராக காவல் நிலையத்திற்கு சென்ற போது, அவரை மார்ட்டின் ஜோசப் பின்தொடர்ந்ததால், அப்போது அவர் புகார் கொடுக்கவில்லை. ஒரு மாதம் கழித்து ஜோசப் மீது அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.
அதையடுத்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து கொச்சி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றவாளியை கைது செய்ய திருச்சூர் போலீசாருடன் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 27 வயதுடைய பெண் கிட்டதிட்ட பிப்ரவரி 15 முதல் மார்ச் 8ம் தேதி வரை 22 நாட்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். எர்ணாகுளத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது மார்ட்டினுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மார்ட்டின், எர்ணாகுளத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்தார் என்றனர்.
ஏற்கனவே, மார்ட்டின் சில கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டவராவார். தற்போது தலைமறைவாக உள்ளதால், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு அவர் மீதான ‘கிரைம் கார்டு’ கொடுக்கப்பட்டுள்ளது. லுக் அவுட் நோட்டீஸ் இன்னும் அளிக்கப்படவில்லை’ என்றனர். தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘என்னை படுக்கையில் கட்டிவைத்து துடைப்பம், பெல்ட்டால் அடித்தார். சிறுநீர், கழிப்பறையிலிருந்து தண்ணீரையும் குடிக்க வைத்தார். என்னை தூங்கவிடாமல் தடுக்க, என் மீது ஏற்படுத்திய காயங்களின் மேல் சூடான நீரை ஊற்றுவார். அவர் என் கண்களில் மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளிப்பார்’ என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நன்கு படித்து நல்ல வேளையில் இருக்கும் பெண்களே பெற்றவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்ற பெயரில் இதுபோன்ற கொடூரர்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுகின்றனர்.
