ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு இருக்கா இல்லையா ? முக்கிய அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின் !
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது.
இதையயடுத்து தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்கப்படுமா ? என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
