மணிகண்டனை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளது… நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்…
சினிமா துணை நடிகை சாந்தினி பாலியல் புகார் வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக காவல் துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பல முறை கருத்தரித்து, அதை கலைத்ததாகவும், துணை நடிகை புகார் அளித்திருந்தார். இது தொடர்பான புகார் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காவல் துறை, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை விசாரிக்க வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளதாகவும், அவருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
எனவே மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்றிது. கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதென்றம். அவருக்கு முன்ஜாமீன் ஏற்க கூடாது என்றும், முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாந்தினி தரப்பில் இருந்து முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
