தமிழ்நாடு

ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பொக்கிஷத்தை தேடும் பணி…! கொரோன பரவல் குறைவால் 27 நாட்களுக்கு பிறகு கீழடி அகழாய்வு பணி மீண்டும் தொடக்கம் !

கீழடியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப்.13ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது.

Keeladi Excavations: 2500 Year Old Habitat as Big as Harappa Mohenjodaro!

கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூரிலும் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. கீழடியில் 5 குழிகள், கொந்தகை, அகரத்தில் தலா 3 குழிகள், மணலூரில் 2 குழிகள் தோண்டப்பட்டன. அகழாய்வில் சுடுமண் பகடை, கல்உழவு கருவி, பாசி, மணிகள், மூடியுடன் கூடிய பானை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.

Keeladi | Department Of Archaeology

தமிழகம் முழுவதும் கடந்த மே 10ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 27 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பணிகள் தொடங்கின.

கீழடி அகழாய்வில் புதிதாக அகலமான திண்டு கண்டுபிடிப்பு | Keeladi excavation -  hindutamil.in

முதற்கட்டமாக, அகழாய்வு குழிகள் மீது மூடப்பட்டிருந்த தார்ப்பாய்களை அகற்றி இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இன்று முதல் அகழாய்வு தளத்தில் பணிபுரியும் அனைவரையும் அலுவலர்கள் வர சொல்லியுள்ளனர். எனவே மீண்டும் பணிகள் முழு வீச்சில் தொடங்க உள்ளது.