“அல்லா மேல சத்தியமா சொல்றே… நீ நாசமா போய்டுவே”… பெண் காவலரை சாபம் விட்ட நபர்…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சில தளர்வுகளுடனும், பிற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து வெளியே நடமாடி வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். எந்தவித காரணமும் இல்லாமல் பைக்கில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி போலீசார் வாகனத்தை பறிமுதல்செய்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை வாய்க்கு வந்தபடி, சாபம் விட்டார். மேலும் தெலைபேசியில் அமைச்சர் சேகர் பாபுவிடம் தொட்ரபு கொண்டு அவரிடம் பேசுமாறும் அவர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு பெண் காவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். பெண் காவலரை மிரட்டும் வகையில் பேசினார். ஆத்திரமடைந்த அந்த நபர், உனக்கு நல்ல சாவே வராது… அல்லா மேலே சத்தியம் செய்து சொல்றேன்… நீ நாசமா போய் விடுவாய் என சாபமிட்டார்.
பெண் காவலரை, இஸ்லாமியர் ஒருவர் சாபம் விட்ட சம்பவம் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைப்பவர்களை இவ்வாறு இழிவுபடுத்துவது, பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது.
