இந்தியா

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்… கொலை செய்து நாடகமாடியவனை அடித்து கொன்ற ஊர் மக்கள்..!

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை, கிராம மக்கள் கற்கள் உள்ளிட்டவைகளால் அடித்து கொன்ற சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சம்பாயா கண்டிரிகை கிராமத்தைச் சேர்ந்த சின்னா என்பவர், அதே ஊரைச் சேர்ந்த சுஸ்மிதா என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். செவிலியராக பணிபுரிந்து வந்த சுஸ்மிதா, சின்னாவின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சின்னாவின் தொந்தரவால் நொந்துபோன சுஸ்மிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னா, சுஸ்மிதா வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். சுஸ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் திரண்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த சின்னா, கழுத்தை அறுத்து உயிருக்கு போராடுவதுபோல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சின்னாவின் மேல் ஆத்திரமடைந்த அப்பகதி மக்கள், அவன் மீது கற்கள் உள்ளிட்டவைகளை வீசி அடித்துக் கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.