உலகம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் …! ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 9.57 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலி நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சிலியின் கன்ஸ்டிடுசியான் (Constitución) நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது .