சசிகலா தலைமைக்கு அதிமுக சென்று விடும்… கார்த்தி சிதம்பரம் ஆரூடம்…
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு சரித்திர விபத்து என்றும், அதிமுக சசிகலாவின் தலைமைக்கு சென்று விடும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் சிலருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவதாகவும், அதிமுகவினருடன் இல்லை என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். சசிகலாவின் தொலைபேசி பேச்சால் அதிமுகவில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக கட்சி முழுவதுமாக சசிகலாவின் தலைமைக்கு சென்று விடும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார். இது தனது அரசியல் ஆரூடம் என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து என்றும் அந்த கதை முடிந்து விட்டதாக கூறினார். மேலும், இனி சசிகலாதான் அதிமுகவிற்கு தலைமை தாங்குவார் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அவரது இந்த கூற்று அரசிய்ல வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
