தமிழகத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 2 லட்சத்து 53 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 26 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.
