Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 33,075 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,075 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 335 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,486 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 56,278 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,075 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 3 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,072 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,31,291 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,52,73,493 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,719 பேர் ஆண்கள், 14,356 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,75,262 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,55,991 ஆகவும் அதிகரித்து உள்ளது. 20,486 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,81,690 ஆக உயர்ந்தது.

335 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 152 பேர் தனியார் மருத்துவமனையிலும், 183 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்து உள்ளது.