சினிமாதமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவர்கள் மக்களின் உயிரைக்காக்க பணம் கொடுக்கலாமே! – ட்விட்டர் பதிவின் மூலம் கோபத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பேரரசு

உலகநாடுகளில் இருக்கும் அணைத்து மக்களின் ஒரே பிராத்தனையாக இருப்பது கொரோனா என்னும் கொடிய நோய் விரைவில் அழிய வேண்டும் என்பது மட்டும் தான் .ஆனால் அந்த கொடிய நோய் சற்றும் சளைக்காமல் அனைவரையும் வேட்டையாடி வருகிறது .இந்நிலையில் தற்போது தொற்றின் வேகம் அதிதீவிரமாக உள்ளது . நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

ஒருபக்கம் ஊரடங்கு, மறுபக்கம் தடுப்பூசி என அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய – மாநில அரசுகள் செயல்படுத்தி உள்ளன.. இதற்கு நடுவில், மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு, படுக்கைகளுக்கு தட்டுப்பாடு, என்ற அத்தியாவிசய தேவைகள் எழுந்து வருகின்றன.

இவற்றுக்கு தீர்வாக இருக்கும் , ஆக்சிஜன் சிலிண்டர்களையும், ஆர்டிபிசிஆர் கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவைகளையும் தமிழக அரசு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. ஆனால், தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லை. பெரிய அளவில் நிதி தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்களிடமும், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களிடமும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதியுதவியை தந்து வருகிறார்கள்.அந்த வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார், குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இந்நிலையில்,பிரபல டைரக்டர் பேரரசு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில், “இப்பொழுதும் நிதி என்றால் சினிமாக்காரர்கள்தான் அள்ளித் தருகின்றனர்! அரசியலில் கோடிக்கோடியாய் சம்பாதித்த எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கிறார்களே அவர்கள் கொடுக்கலாமே! ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவர்கள் மக்கள் உயிரைக்காக்க பணம் கொடுக்கலாமே!” என பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த ட்வீட் அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டைரக்டர் பேரரசு மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தான் பாஜகவில் இணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

டைரக்டர் பேரரசுவின் ட்வீட் பரபரப்பாக பேசப்படுவது முதல் முறை அல்ல
இவர் பாஜக கட்சியில் சேர்ந்த சமயத்தில், விஜய் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்து, பல தரப்பினரால் பேசுபொருளாக இருந்தது . அப்போது, ஒரு ட்வீட் போட்டிருந்தார் பேரரசு. “விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது, இப்படியெல்லாம் செய்தால், பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாகும், போராடுவதற்கு நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன” என்று பதிவிட்டிருந்தார் .

இந்நிலையில் தற்போது இவர் போட்ருக்கும் ட்வீட் யாரை குறிக்கிறது என்பது தான் ஒட்டு மொத்த ட்விட்டர் வாசிகளின் மனதில் பெரும் குழப்பமாய் எழுந்துள்ளது . ஆனால் அவர் சொல்வது உண்மையாகத்தான் தோன்றுகிறது.

கொரோனா மட்டுமல்லாமல் இதற்கு முன் வந்த எதனை பேரிடர் சம்பவங்களுக்கு அரசியல்வாதிகள் நிதியளித்திருக்கிறார்கள் என்று என்ன எண்ணம் மனதில் எழுகிறது .இதுவரை அரசியல்வாதிகள் யாரும் தனி ஒருவராக முன்வந்து நிதி ஏதும் தந்ததில்லை என்ற கோபம் பேரரசு ட்விட்டர் பதிவின் மூலம் மக்களின் மனதில் மீண்டும் எழுகிறது .