சென்னையில் நடைபெற்று வரும் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்ற 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னையில் நடைபெற்று வரும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கைப் போல மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள், செட் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட 17 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதில் ஒரு ஒளிப்பதிவாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
