வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழப்பு!
தமிழ் திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அந்த ஆண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்று. அப்படத்திலும், அதேபோல, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ரஜினி முருகன்’ படத்திலும் நகைச்சுவையோடு நடித்து கவனம் ஈர்த்தார் பவுன்ராஜ்.
இன்னும் தெளிவாக சொல்லவனேடும் என்றால் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலையே கவிழ்த்துவிடும் அவரது காட்சி அனைவரையும் ரசிக்க வைத்தது.
இந்நிலையில், நடிகர் பவுன்ராஜ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்” என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.
