தமிழகத்தில் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,95,339 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 20,037 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13, லட்சத்து 18 ஆயிரத்து 982 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை17 ஆயிரத்து 056 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 6538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 60 ஆயிரத்து 042- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
