“ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்” – முதல்வர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, விராலிமலை பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அவர், தமிழக வரலாற்றில் விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக தான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, இலுப்பூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது பயிர்க்காப்பீடு திட்டம் மூலம் அதிக நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், தமிழகத்தில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, 234 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக சாடிய அவர், மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என கூறினார்
