கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டப் பிரதமர் மோடி கடினமாக உழைக்கிறார் – உள்துறை அமைச்சர் அமித்ஷா
பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளால் அடுத்த காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டப் பிரதமர் மோடி கடினமாக உழைப்பதாகத் தெரிவித்தார். பொருளாதாரத்தின் மீதான கொரோனாவின் பாதிப்பு நீண்டகாலத்துக்கு இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்பக் கொள்கை வகுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 விழுக்காடு மட்டுமே குறைவாக உள்ளதாகவும், அடுத்த காலாண்டில் இது வளர்ச்சிப் பாதைக்கு வந்துவிடும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
