விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவுஸ் செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் சாய்த்தது .

இந்த பக்கம் பெங்களூரு அணி தங்கள் முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தல்வியை சந்தித்தது . அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது .

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.