தென்னாப்பிரிக்கா நாட்டில் ஊழியர்கள் மூலம் சிங்கங்களுக்கு பரவிய கொரோனா…!
தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள வனவிலங்கு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்களால் அங்கு பராமரிப்பில் உள்ள சிங்கங்கள் மற்றும் மலை சிங்கங்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொடிய நோய் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவினால் அதனால் ஏற்படும் புதிய வகை மாறுபாடு கவலையை எழுப்பும் வகையில் இயக்கும் என உள்ளூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வயிற்றுப்போக்கு, மூக்கடைப்பு மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகளால் தான் இரண்டு மலை சிங்கங்கள் கோவிட் -19 தொற்று பாதிப்புக்கு உள்ளது .
அதன் பின் இந்த தொற்றிலிருந்து அந்த சிங்கங்கள் 23 நாட்களுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்தது என்று பிரிட்டோரியா பல்கலைக்கழகம் கடந்த சில தினத்துக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு வருடம் கழித்து, தென்னாப்பிரிக்காவின் மூன்றாவது அலைக்கு மத்தியில், டெல்டா மாறுபாட்டால் மூன்று சிங்கங்களில் , அவற்றில் ஒன்று நிமோனியாவாலையும்.மற்ற இரண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது என்று பொதுவான கருத்து இருந்தாலும் , அந்த கருத்துக்கு எதிர்மாறாக தற்பொழுது வெளியான இந்த ஆய்வின் முடிவுகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . அதாவது முதலில் அந்த ஊழியரிடமிருந்து
சிங்கங்களுக்கு நோய் பரவியதாகவும், அதன் பின் இந்த தொற்று அங்கு உள்ள மற்ற விலங்குகளுக்கும் பரவியதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது . எனவே இந்த தொற்று மனிதனிடமிருந்து விலங்குகளுக்கும் பரவும் என நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் சொல்லப்பட்டு உள்ளது .
இதனால் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கையாளும் போது மாஸ்க் அணிவது மற்றும் பொது மக்கள் சீரான இடைவெளியை கடைபிடிப்பது , போன்ற நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
“இது அழிந்து வரும் உயிரினங்களை நோய்வாய்ப்பட்டு இறக்காமல் பாதுகாப்பதாகும்” என்று பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்களான மரியட்ஜி வென்டர் மற்றும் கட்ஜா கோப்பீல் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . மேலும் புதிய வகை மாறுபாடு மீண்டும் ஏற்பட்டால் ,இது மீண்டும் மனிதனுக்கு பரவும் அபாயம் அதிகரித்து உள்ளது .
இந்த தொற்று நோய் தொடங்கியதிலிருந்து, டென்மார்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் சில விலங்குகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகும் வெள்ளை எலிகள் உட்பட 2,000 சிறிய விலங்குகள் அழிக்கப்படும் என்று ஹாங்காங் அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .
