சினிமா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்..! சோகத்தில் ரசிகர்கள்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. 20 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 5 தற்போது டாப் 10 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது .

இம்முறை இந்த சீசனில் யார் வெல்ல போகிறார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால், யார் அந்த வெற்றியாளர் என்று கணிக்கமுடியாத அளவிற்கு அனைவரும் தனித்தன்மையுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது யார் என்பதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய ஷாக் கொடுக்கும் வகையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ‘அக்ஷரா’ வெளியேறியுள்ளார்.

80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர் என்று பேர் எடுத்த அக்ஷரா, குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அக்ஷராவின் இந்த எலிமினேஷன் அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.