நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு..! மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்..
இந்தியாவில் நீண்ட காலமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இப்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இருப்பினும் கொரோனா முழுமையாக நீங்கிவிடவில்லை.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், அதைக்கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தனக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளப்பக்கத்தில் இதை பகிர்ந்துள்ள அவர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
மேலும் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
