மீண்டும் உயர்வை சந்திக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை
சென்னையில் இன்று (அக் – 05), பெட்ரோல் லிட்டருக்கு 100.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.31 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லி்ட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ 100.23 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 95.59 ஆகவும் உள்ளது.
