பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள்..! மலர்களால் அலங்கரிப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள் இன்று இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கும் சிலைகளுக்கும் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதையை செய்து வருகின்றனர் .
அந்த வகையில் திருமதி சசிகலா, அண்ணா அவர்களின் திருவுறுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா என்று அன்பேடு அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 113ஆவது பிறந்தநாள் ஆஙகாங்கே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளிட்ட பலர் , அண்ணாவின் படத்திற்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சசிகலா அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அறிஞர் அண்ணா, 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி வளர்த்தார். தமிழகத்தின் நவீன முன்னேற்றத்திற்காகவும், சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காகவும் அரசியல் அதிகாரத்தை தேவை என்பதை விளக்கி, அதற்கான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாதையை உருவாக்குவதில் அண்ணா பெரும்பங்காற்றியவர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகளின் உருவாக்கத்திற்கு அண்ணாவின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் பலரும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
