Covid19தமிழ்நாடு

இயல்பை விட மெகா தடுப்பூசி முகாமில் 3 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – ராதாகிருஷ்ணன்

சென்னை, கோவை, திருப்பூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறிருப்பதாவது :

இயல்பை விட மெகா தடுப்பூசி முகாமில் 3 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

மக்களின் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்

இதுகுறித்து மேலும் பேசிய அவர் சமூக வலைதளங்களில் வரும் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்தார்