இந்தியா

சிபிஐக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதியை 6 வாரத்திற்குள் ஏற்படுத்த வேண்டும்..! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்படத் தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது

சிபிஐக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கட்டுமானங்கள், குடியிருப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதியை 6 வாரத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கடந்த 31.12.2020 வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மேலும் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது