“ஆதாரத்துடன் சிக்கியுள்ளார்கள்… இது பழிவாங்கும் செயல் இல்லை”… கி.வீரமணி அதிரடி…
ஊழல் மூலம் சொத்து குவித்த வழக்கில், தனி நீதிமன்றம் அமைத்து ஊழல் மூலம் குவித்த சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு 811 கோடி ஒப்பந்தங்கள் ஒதுக்கியதாக புகார் எழுந்தது. திமுக எம்.பி. எஸ்.ஆர்.பாரதி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணியின் உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது சோதனை நடத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இந்த 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஊழல் மூலம் குவித்த சொத்துக்களை தனி நீதிமன்றம் அமைத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், ஆதாரத்துடன் மாட்டிக் கொண்டிரக்கிறார்கள் என்றும் இது பழிவாங்கும் செயல் இல்லை என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.
