அரசியல்

வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார்… சபாநாயகர் அப்பாவு தகவல்…

வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் நடைபெறும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு வரும் 13 ஆம் தேதி பொது பட்ஜெட் அறிக்கையும், 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

வருகிற 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் என்றும் 4-வது நாள் விவாதம் முடிந்ததும், நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரின் பதிலுரையோடு முடிவு பெறும் என்றார்.

அதன் பின்னர் வருகிற 23 ஆம் தேதி முதல் பொது மானிய கோரிக்கையானது தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 21 வரை 23 நாட்கள் பொது மானிய கோரிக்கை நடைபெறும் என்றார். அமைச்சர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு, துணை அமைச்சர்களின் பதிலுரையோடு நிறைவு பெறும் என்று அப்பாவு கூறினார்