ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையமாட்டார்… எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்…
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணையமாட்டார் என்று எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.
அதிமுக ஆட்சி காலத்தின்போது, தனது அதரடி பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியவர் அப்போதைய பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பாக அரசியல் குறித்து எந்தவித கருத்தும் கூறாமல் ராஜேந்திர பாலாஜி அமைதி காத்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் திடீரென்று டெல்லி சென்றுள்ளார். அவரது திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறினார். அதிமுகவில்தான் ராஜேந்திர பாலாஜி உள்ளார் என்றம் அவர் பாஜகவில் இணைய மாட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்ததிட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான கூட்டவதாகவும் அவர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான் என்றும் அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
