பட்டியலினத்தைச் சேர்ந்த இயக்குநர்களைத் திரைத்துறையை விட்டே துரத்தணும்…! நடிகை மீரா மிதுன் திமிர் பேச்சு…!
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் திரைத்துரையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்று நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் மீரா மிதுன். அழகிப் பட்டத்தோடு, தமிழ் திரை உலகில் சில படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்து வரும் மீரா மிதுன், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். தனது படத்தை மார்பிங் செய்த, பட்டியலினத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் படங்களில் பயன்படுத்துவதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.

பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவருமே கிரிமினல்ஸ் என்றும், அந்த சமூகத்தை சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் திரைத்துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மீரா மிதுன் கூறியிருக்கிறார்.
அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலின சாதியைப் பற்றி மிக இழிவாக பேசியுள்ள மீரா மிதுனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
