தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 1908 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் மட்டும் 1,60,501 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,985 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,83,71,633 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,148 பேர் ஆண்கள், 837 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,02,089 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,69,256 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,908 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,16,938 ஆக உயர்ந்துள்ளது. 30 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 27 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
