இந்தியாவிளையாட்டு

“ராஜீவ் காந்தி” கேல் ரத்னா விருது இனி “மேஜர் தயான் சந்த்” பெயரில் வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு…

இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதாக கருதப்படுவது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் விருது என்ற பெயரில் வழங்கப்படும என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர்கள், காமன்வெல்த் போட்டி, உலக கோப்பை போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், விளையாட்டு துறைக்கு மிக சிறந்த முறையில் சேவை செய்பவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேஜர் தயான் சந்துக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்த நிலையில், தற்போ அவரது பெயரில் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பலர் கோரிகக்கை வைத்ததை ஏற்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.