கடந்த 10 ஆண்டுகள் நிதிநிலை; வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறது திமுக அரசு…
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9 ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
திமுக தலைமையிலான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பொது நிலைநிதி அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்.
இந்த வெள்ளை அறிக்கையில், கடன் விபரம், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவு செலவு, வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்டவை வெள்ளை அறிக்கையில் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், வருவாய் இழப்பை எப்படி சரிசெய்வது உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
