சினிமா

நடிகர் தனுஷின் சொகுசு கார் நுழைவு வரிவிலக்கு வழக்கில் நாளை தீர்ப்பு…

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி சேங்யயப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து ரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ், இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 60.66 லட்சம் நுழைவு வரி செலுத்த வணிகவரி துறை உத்தரவிட்டது. சொகுசுகாருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி, நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, 50 சதவிகித வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் 50 சதவிகித வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன் பின் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்யை விமர்சித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு லட்சம் அபராதம் விதித்திருந்தார். அது தொடர்பான விஜய்-ன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.