தமிழகத்துக்கு 29 லட்சம் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு… மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்…
தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், கொரோன தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார். தொற்று பரவும் இடங்களில் மினி நோய் கட்டுப்பாடு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்களைத் தேடி மருத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளதாகவும், தமிழகத்திற்கு இதுவரை 2.54 கோடி தடுப்பு மருந்து வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
