மக்களை மையமாக கொண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: கமல் ஹாசன்
மக்களை மையமாகக் கொண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கையாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவை அவினாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்பு ஈஸ்ட் இந்தியா கம்பெனி இருந்தது என்றும் இப்போது நார்த் இந்தியா கம்பெனி உருவாக்கியிருக்கிறார்கள் என்றார். இதை மக்கள் அனமதிக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு நாடு என்று கூறினால் உங்களை தோளில் தூக்கி வைத்துக் கொள்ள மக்கள் தயார் என்றார்.
வியாபாரத்திற்கு சவுகரியமாக இருக்கும் என்று எங்கள் வளங்களை எல்லாம் நீங்கள் தனியாருக்கு கொடுக்க முயன்றால் நீங்கள் கம்பெனிதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது என்பதுதான் தனது நம்பிக்கை என்றார்.
அரசியல் கட்சி சம்பந்தப்படாமல் மக்கள் அதில் பங்குபெற வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என்றும் அது மக்களின் ஆட்சியாக மாறுவதற்கான அனைத்து ஏற்பாடகளையும் செய்ய வேண்டும் என்று கமல் ஹாசன் கூறினார்.
