அரசியல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவை புறக்கணிக்க அதிமுக முடிவு?

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கடைத்திறப்பு விழாவை, அதிமுக புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறந்து வைக்கவுள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவை, அதிமக புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதிமுக தலைமையகத்தில் இருந்து எதுவும் வெளியிடப்படவில்லை.