அரசியல்தமிழ்நாடு

கிறிஸ்துவ ஜெப கூட்டத்தின் மூலமே திமுக ஆட்சிக்கு வந்தது… அமைச்சர் நாசர் பேச்சு…

தமிழகத்தில் கிறிஸ்துவ ஜெப கூட்டத்தின் மூலமாகவே திமுக ஆட்சிக்கு வந்ததாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தின் 40-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜே. ராஜேந்திரன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், கடந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள் இருந்ததாகவும் இதன் விளைவால்தான் அந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார். இதே ஜெபக்கூட்டத்தில் இந்து – முஸ்லீம் – கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தினரும் இருக்கின்றனர். இதுதான் மத நல்லிணக்கம், மத ஒற்றுமை என்றார்.

இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள் சார்ந்து இருந்தாலும், இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்றும் கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தின் மூலமாகவே திமுக ஆட்சிக்கு வந்தது என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.