அரசியல்தமிழ்நாடு

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் சொத்துக்கள் ஏலம்… வங்கி அறிவிப்பு…

திமுகவின் முன்னாள் எம்.பி.யும், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரும், தொழிலதிபருமான கே.சி.பழனிசாமியின் பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலத்திற்கு வந்ததாக வங்கிகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் அவர் வாங்கிய 190 கோடி ரூபாய்க்கான கடனை திரும்ப செலுத்ததால் கே.பி.பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்கள் ஏலம் விடுவதாக நாளிதழில் ஏல அறிவிப்பு வெளியானது.

1971 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த கே.பி.பழனிசாமி, 1971 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது 2004 மற்றும் 2011 ஆண்டு லோக்சபா தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலையும், புதுச்சேரியில் காகித ஆலை உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தொழில் நடத்த முடியாத நிலையில், வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கே.பி.பழனிசாமி, அவரது மனைவி, மகன், மகள் பெயரில் உள்ள சொத்துக்கள் மீது ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.