குற்றம்சினிமா

நடிகர் ஆர்யா மீது இளம்பெண் அளித்த பணமோசடி புகார் வழக்கு…

திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி-க்கு உத்தரவிடக்கோரி, பெண்ணின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது சார்பில் ராஜப்பன் என்பவர் மனு தாக்கல் செய்தார்

திருமணம் செய்வதாக உறுதி அளித்த ஆர்யா, தன்னிடம் 70 லட்சம் ரூபாய்க்குமேல் பணம் பெற்றுக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், 6 மாதத்தில் நடிகை சாயிஷாவிடம் இருந்து விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்றிஞர், சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க சிபிசிஐடி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், இந்த விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.