உலகம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் லுவூக்கிலிருந்து மேற்கு-வடமேற்கில் 97 கி.மீ. மையப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுலவேசியில் உள்ள பாலுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதுதொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த உறுதியான தகவல் ஏதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.