டோக்கியோ ஒலிம்பிக்: மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு…
ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அவுட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார்.
இதனால் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாக இது கருதப்படுகிறது. சீனாவின் ஹோ சிஹாய் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஏன் என்றால், தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ ஸீகுய்குய்-க்கு ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால், மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீன வீராங்கனை, ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
