பீகார்காரர்களுக்கு மூளை கம்மியாம்… அமைச்சர் கே.என்.நேரு சர்ச்சை பேச்சு…
பீகாரிகளுக்கு நம்மைவிட மூளை குறைவு என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திசை காட்டும் திருச்சி என்ற பெயரில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நம்மைவிட பீகார்காரர்களுக்கு மூளை குறைவு என்று பேசியுள்ளார். பீகாரைச் சேர்ந்தவர்கள் 4 ஆயிரம் பேர் நம்முடைய பொன்மலை ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருவருவதாக கூறிய அவர், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே தேர்வில் அவர்களைக் காப்பியடிக்க வைத்து பணியமர்த்தி விட்டதாக கூறினார்.
மத்திய அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சோபிக்கவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற நாம் முயலவில்லை என்றார். வங்கி, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் பிற மாநில மக்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.
தமிழக இளைஞர்கள் அதிக புத்திசாலித்தனம் மிக்கவர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். பீகாரிகள் குறித்து அமைச்சர் பேசியது அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
